இந்திய வானிலை மையம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை மையம் காலை வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியா முழுவதும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மேற்கு பருவ நிலை நிறைவடைந்ததற்கான சூழல் உருவாகுகிறது. இதை தொடர்ந்து வடகிழக்கு பருவநிலை தொடங்கும் சூழல் ஏறபட இருப்பதாக அதில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அக்டோபர் 22ஆம் தேதி கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு உள்ளது. அக்டோபர் 20 முதல் 22 வரை தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகாவின் தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.