டி- 20 கிரிக்கெட் போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி- 20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி.

india vs west indies t20 match west indies win

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த இரண்டாவது டி- 20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

india vs west indies t20 match west indies win

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சிவம் துபே 54, ரிஷப் பந்த் 33 ரன்கள் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் அதிகபட்சமாக சிம்மன்ஸ் 67, லிவிஸ் 40, பூரான் 38 ரன்கள் எடுத்தனர். அதேபோல் மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் கெஷ்ரிக் வில்லியம்ஸ், ஹைடன் வால்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.மூன்று போட்டிகள் கொண்ட டி- 20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு தொடரில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளனர்.

India india vs west indies Kerala t20 match thiruvananthapuram
இதையும் படியுங்கள்
Subscribe