Advertisment

இன்று (05.01.2020) இந்தியா- இலங்கை முதல் டி 20 போட்டி!

மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

Advertisment

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (05.01.2020) இரவு 07.00 மணிக்கு நடைபெறுகிறது.

Advertisment

இந்திய அணியின் வீரர் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், ஷிகர் தவான் அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், நான்கு மாதத்திற்கு பிறகு பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

india vs sri lanka t20 match series assam

புத்தாண்டை வெற்றியுடன் தொடங்க இந்தியா- இலங்கை அணிகளின் வீரர்கள் தீவிர முனைப்பு. அதேபோல் போட்டி நடைபெறும் அசாம் பார்சாபாரா மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டியைக் காணச் செல்லும் ரசிகர்கள் பேனர், அட்டை போன்றவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக அசாமில் போராட்டம் நடந்து வருவதால் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Assam t20 match India vs Srilanka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe