தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வீரர் ரோஹித் சர்மா இரட்டை சதமடித்தார்.
ராஞ்சியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் சிக்ஸர் அடித்து தனது முதல் இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார் ரோஹித். 249 பந்துகளில் 28 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 200 ரன்களை கடந்தார். டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 4- வது வீரர் ரோஹித் சர்மா ஆவர். இந்த போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.