இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் தென்னாப்பிரிக்காவை பேட்டிங் செய்யுமாறு பணித்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
அதன்படி, முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சுமார் 2441 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்தார் விராட் கோலி. இந்திய அணியின் மற்றொரு வீரர் ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் 2434 ரன்கள் எடுத்துள்ளார்.