இலங்கையில் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக இரு நாட்களுக்கு இலங்கையில் உள்ள இந்தியா விசா விண்ணப்ப மையம் (IVS - LANKA) இன்று (22/04/2019)மற்றும் நாளை (23/04/2019) மூடப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதே போல் இலங்கை முழுவதும் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில் இந்தியா இத்தகைய அறிவிப்பை வெளியீட்டுள்ளது.

Advertisment

srilanka

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மேலும் இலங்கையில் நாடு முழுவதும் தீவிர சோதனை செய்து வருகின்றனர் இலங்கை ராணுவத்தினர். இலங்கையில் உள்ள வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகள் உட்பட பலரும் நாடு திரும்பும் வகையில் அந்தந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கையில் நேற்று நடந்த தாக்குதலில் வெளிநாட்டை சேர்ந்த பலரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பி.சந்தோஷ், சேலம்.