இங்கிலாந்து நாட்டில் கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அந்தநாட்டில் புதிய வகை கரோனா தொற்று வேகமாகபரவி வருகிறது.புதிய வகை கரோனா பரவலைத் தொடர்ந்து, தென்கிழக்கு இங்கிலாந்து மற்றும் லண்டன் நகரில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய வகை கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்எனஅந்தநாடுதெரிவித்துள்ளது. மேலும், இங்கிலாந்திலிருந்து இத்தாலி திரும்பிய ஒருவருக்கும் இந்த புதிய வகை கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இங்கிலாந்தில் புதியவகைகரோனாபரவலைத்தொடர்ந்து, அங்கிருந்து விமானங்கள் வருவதற்குசவுதி அரேபியா, கனடாஉள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன. தற்போது இந்தியாவும் இங்கிலாந்திலிருந்து விமானங்கள் வர தடை விதித்துள்ளது.
இங்கிலாந்து விமானங்கள், நாளை இரவு 11.59 மணியிலிருந்து வரும் 31 ஆம் தேதி வரை இந்தியாவிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத்தடை அனைத்து வகையானவிமானங்களுக்கும் பொருந்தும் என மத்திய சிவில்விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.மேலும் நாளை இரவு வரை, இந்தியா வரும் இங்கிலாந்து பயணிகளுக்கு கரோனாபரிசோதனை செய்யப்படும் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது