சாலையில் இருந்தும் ஏவக்கூடிய அணு ஆயுத ஏவுகணை - வெற்றிகரமாக சோதித்தது இந்தியா! (வீடியோ)

agni p

அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் புதிய தலைமுறை அக்னி ப்ரைம் ஏவுகணையை இந்தியா, இன்று (18.12.2021) வெற்றிகரமாக இரண்டாவது முறையாக சோதித்துள்ளது. ஒடிசாவில் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் நடைபெற்ற இந்த சோதனையில்அக்னி ப்ரைம் ஏவுகணை, அதன் திட்டத்தின் நோக்கங்களைஅதிக துல்லியத்துடன் நிறைவேற்றியுள்ளது.

இந்த அக்னி ப்ரைம் ஏவுகணை 1000 முதல் 2000 கிலோமீட்டர் வரை பாய்ந்து இலக்கைத் தாக்க வல்லது. மேலும் ஏவுகணையின் எடை, அக்னி 3 ஏவுகணையின்எடையில் பாதிதான்என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணையை நீண்டகாலத்திற்கு இருப்பில் வைத்திருக்க முடியும்.

மேலும், இந்த அக்னி ப்ரைம் ஏவுகணையை, ரயிலில் இருந்தும், சாலைகளிலிருந்தும்ஏவலாம் என்பது இதன் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். மேலும், நாட்டின் எந்த மூலைக்கும் எடுத்துச் செல்ல முடியும் என்பதும் இதன் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும்.

agni drdo
இதையும் படியுங்கள்
Subscribe