Advertisment

வேறு வேறு தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா? - இந்தியாவில் புதிய ஆய்வு..!

chairman of ccovid 19 working group

இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் சீரம் மற்றும் பாரத் பயோ-டெக் நிறுவனங்கள் தேவையான அளவிற்கு தடுப்பூசியை உற்பத்தி செய்ய திணறி வருகின்ற சூழலில், இந்தியாவில் கரோனா தடுப்பூசிகளுக்கான தட்டுப்பாடு நீடித்து வருகிறது. இதனிடையே, தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisment

இதற்கிடையே சமீபத்தில் வெளிநாட்டுத் தடுப்பூசிகளைக் கொண்டு நடந்த ஓர் ஆய்வின் முடிவில், முதல் டோஸாக ஒரு தடுப்பூசியையும், இரண்டாவது டோஸாக வேறொரு தடுப்பூசியையும் செலுத்திக்கொள்வது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனத் தெரிய வந்தது. ஆனால், எந்தநாட்டிலும் இதுவரை தடுப்பூசிகளை மாற்றிச் செலுத்த அனுமதி வழங்கப்படவில்லை. இந்தியாவிலும் தடுப்பூசிகளை மாற்றிச் செலுத்திக்கொள்வது தொடர்பாக எந்த ஆய்வும் நடக்கவில்லை.

Advertisment

இந்தநிலையில், இந்தியா அவ்வாறான ஆய்வை விரைவில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது என நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கீழ் செயல்படும் கரோனா பணிக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார். இரண்டு வெவ்வேறு தடுப்பூசி டோஸ்களை செலுத்திக்கொள்வது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா என்பது குறித்த சோதனையை இந்தியா சில வாரங்களில் மேற்கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பு குறித்து டாக்டர் என்.கே. அரோரா பேசுகையில், "சீரம் நிறுவனம் நேற்று ஒரு கடிதத்தில், ஜூன் முதல் தாங்கள் 10 - 12 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்வோம் எனத் தெரிவித்துள்ளனர். இது தற்போது தயாரிக்கப்படுவதைவிடக் கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகமாகும். பாரத் பயோடெக்கும் தனது உற்பத்தியை அதிகரிக்கப் போகிறது. ஜூலை இறுதியில் அவர்களும் 10-12 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்வார்கள். ஆகஸ்ட் மாதத்திலிருந்து மாதத்திற்கு 20-25 கோடி தடுப்பூசி டோஸ்கள் அவர்களிடமிருந்து கிடைக்கும். மற்ற உற்பத்தி பிரிவுகளிலிருந்தோ, வெளிநாடுகளிலிருந்தோ 5-6 கோடி டோஸ்கள் கிடைக்கும். தினமும் ஒரு கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதே நோக்கம்" எனக் கூறியுள்ளார்.

covaxin covishield coronavirus vaccine
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe