corona

Advertisment

இந்தியாவில் கரோனாபாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட கரோனா பரவும் வேகம் அதிகமாக உள்ளது. கரோனாபரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று (21.04.20210) ஒரேநாளில்3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு கரோனாஉறுதியாகியுள்ளது. ஒரேநாளில்மூன்று லட்சம் பேருக்கு கரோனாஉறுதியாவது இந்தியாவில் இது முதல்முறையாகும்.

மேலும், நேற்றுஒரேநாளில்கரோனாவால்பாதிக்கப்பட்ட2,104 பேர் உயிரிழந்துள்ளனர். மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நேற்று மட்டும் 62 ஆயிரத்து 97 பேருக்கு கரோனாபாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 33 ஆயிரத்து214பேருக்கு நேற்று கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 28 ஆயிரத்து 395 பேருக்கு நேற்று ஒரேநாளில்கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.