borris johnson

Advertisment

இந்தியாவின், 71 -ஆவது குடியரசுத் தின விழா வரும் ஜனவரி 26 ஆம் நாள் கொண்டாடப்பட இருக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு குடியரசுத் தின விழாவிலும், உலக நாடுகளின் தலைவர்கள், சிறப்பு விருந்தினர்களாகப்பங்கேற்பர்.

Advertisment

இந்தநிலையில், கரோனாதொற்று பரவல்காரணமாக, வருகிறகுடியரசுத் தினவிழாவில், வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்களா எனச் சந்தேகம் எழுந்தது. தற்போது அந்தச் சந்தேகம் தீர்ந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், வருகின்ற குடியரசுத் தின விழாவில் பங்கேற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதனை இன்று அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து நாட்டின்வெளியுறவுத்துறை பிரதிநிதிகள் இடையே நடைபெற்றபேச்சுவார்த்தைக்குப் பின்னர், ஜெய் சங்கர்இதனை அறிவித்துள்ளார்.

இந்தியாவின் குடியரசுத் தினவிழாவில், 27ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து பிரதமர் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.