jk

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,703 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இதுவரை3.06 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றில் இருந்து 29.27 கோடி பேர் குணமாகியுள்ளனர். மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்தைக்கடந்துள்ளது. இந்நிலையில், நோய் தொற்றிலிருந்து குணமடையும் விகிதம் 97.17 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் தற்போது கரோனா காரணமாக 4,64,357 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 111 நாட்களுக்குப் பிறகு கரோனா தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment