இந்தியாவில் சற்று குறைந்த தினசரி கரோனா பாதிப்பு

corona

இந்தியாவில் தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாபாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்தநிலையில், நேற்றைவிட இன்று, கரோனாஉறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்தியாவில் நேற்று 3 லட்சத்து 47 பேருக்கு கரோனாஉறுதியான நிலையில், 24 மணிநேரத்தில்3 லட்சத்து 37 ஆயிரத்து 704 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில்கரோனாவால்பாதிக்கப்பட்ட 488 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில்2 லட்சத்து 42 ஆயிரத்து 676 பேர் கரோனாபாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதற்கிடையே, நாட்டில் ஒமிக்ரான்பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 50ஆக உயர்ந்துள்ளது.

pandemic
இதையும் படியுங்கள்
Subscribe