Advertisment

CORONA

இந்தியாவில் கரோனாபாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டில் மூன்றாவது கரோனாஅலை தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில்58 ஆயிரத்து 97 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணிநேரத்தில், இந்தியாவில்37 ஆயிரத்து 379 பேருக்கு கரோனாஉறுதியாகியிருந்ததுகுறிப்பிடத்தக்கது.

Advertisment

மேலும் கடந்த 24 மணிநேரத்தில்கரோனாவால்பாதிக்கப்பட்ட 534 பேர் உயிரிழந்துள்ளனர். 15,389 பேர் கரோனாவிலிருந்துமீண்டுள்ளனர். இதற்கிடையே இந்தியாவில் ஒமிக்ரான்பாதிப்பு 2,135 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில்653 பேருக்கும், டெல்லியில் 464 பேருக்கும்ஒமிக்ரான்பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமிக்ரான்பாதிப்பு உறுதியான 2,135 பேரில், 828 பேர் குணடமடைந்துவிட்டதாகமத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.