Advertisment

இந்தியாவில் மேலும் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு

corona

இந்தியாவில் தினசரி கரோனாபாதிப்பு வேகமாக அதிகரித்து வந்தநிலையில், தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 2 லட்சத்து 71 ஆயிரத்திற்கும்மேற்பட்டவர்களுக்கு கரோனாஉறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 2 லட்சத்து 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Advertisment

இந்தநிலையில்கடந்த 24 மணிநேரத்தில், 2 லட்சத்து 38 ஆயிரத்து 18 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்கரோனாவால் பாதிக்கப்பட்ட 310 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில்1 லட்சத்து 57 ஆயிரத்து 421 பேர் கரோனாபாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

Advertisment

இதற்கிடையே இந்தியாவில் ஒமிக்ரான்பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 8,891 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

pandemic India
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe