
இந்தியாவில் நேற்றைவிட இன்று தினசரி கரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 27 ஆயிரத்து 409 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியிருந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 30, 615 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 514 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 82,988 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். நாட்டில் தற்போது கரோனா உறுதியாகும் சதவீதம் 2.45 சதவீதமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.