Advertisment

இந்தியர்களை விட மகிழ்ச்சியாக வாழும் பாகிஸ்தானியர்கள் - ஐ.நா அறிக்கையில் தகவல்!

indians

உலகில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின்பட்டியலை, ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான தீர்வுகள் குழுவால் இந்த பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் மொத்தம் 156 நாடுகளில்ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இந்தியா 144வது இடத்தை பிடித்தது.

Advertisment

இந்தாண்டிற்கான மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின்பட்டியல் தற்போது வெளியாகிவுள்ளது. இந்தாண்டிற்கான பட்டியலை பொறுத்தவரை, மொத்தம் 149 நாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அதில் இந்தியா 139வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலின்படி, நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, இலங்கையில் வாழும் மக்கள், நம்மைவிட மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

Advertisment

உலகில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் பட்டியலில், சீனா 84 வது இடத்தையும், வங்கதேசம் 101 வது இடத்தையும், பாகிஸ்தான் 105 வது இடத்தையும், இலங்கை 129 வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் பின்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பின்லாந்து மிகவும் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

uno Pakistan India happiness
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe