ரயில் கட்டணங்கள் இன்று (31.12.2019) நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி சாதாரண ரயில்களின் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசாவும், குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு இரண்டு பைசாவும், குளிர்சாதன வசதி வகுப்புக்கு கிலோ மீட்டருக்கு நான்கு பைசா கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கட்டண உயர்வு இன்று (31.12.2019) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் சதாப்தி மற்றும் ராஜதானி ரயில்களுக்கும் கட்டண உயர்வு பொருந்தும் என்றும், அதிவிரைவு ரயில்கள், டிக்கெட் முன்பதிவு கட்டணங்களில் மாற்றமில்லை என ரயில்வே நிர்வாகம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.