Advertisment

பாகிஸ்தான், சீனாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்த இந்தியா!

ajit doval

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அங்கு தங்கள் இடைக்கால ஆட்சியை நடத்திவருகின்றனர். இருப்பினும் இதுவரை தலிபான்களின் அரசை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. அதேநேரத்தில், பாகிஸ்தான் விரைவில் தலிபான்களின் ஆட்சியை அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தலிபான்களை அங்கீகரிக்கும் விவகாரத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளன.

Advertisment

அதேநேரத்தில், ஆப்கானிஸ்தானில் தாங்கள் செய்துள்ள முதலீடுகள் காரணமாக, அந்த நாட்டில் தலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளது குறித்து பல்வேறு உலக நாடுகள் கவலையடைந்துள்ளன. மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகள், தலிபான்களால் தங்கள் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என கவலையடைந்துள்ளன. இந்தச் சூழலில், வரும் 20ஆம் தேதியன்று தலிபான்களைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரஷ்யா அழைத்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் கலந்துகொள்ளவுள்ளது.

Advertisment

இந்தநிலையில், ஆப்கானிஸ்தான்விவகாரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முடிவு செய்துள்ளது என்றும், இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறுபாகிஸ்தான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும்தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேநேரத்தில்இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளதலிபான்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அந்த வட்டாரங்கள், இந்ததேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சுவார்த்தையைநவம்பர் 10,11 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

afghanistan china NSA AJIT DOVAL Pakistan Russia
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe