கடந்த ஆண்டு போபர்ஸ் ஊழல் தொடர்பான புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. ஆகவே ரூபாய் 64 கோடி லஞ்ச வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ டெல்லி உயர்நீதிமன்றத்தையும் , பிறகு உச்சநீதிமன்றத்தையும் அணுகியது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது. அதில் சிபிஐ தாங்கள் இந்த வழக்கை மேலும் கொண்டுச் செல்லவில்லை என்று கூறி அந்தர் பல்டி அடித்தது. தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றங்களில் இது தொடர்பாக எதிர்கால திட்டம் என்னவென்பதை பிறகு முடிவு செய்யவுள்ளதாக சிபிஐ தனது பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

Advertisment

POPPERS

ஆகவே இப்போதைக்கு போபர்ஸ் ஊழல் வழக்கை மேலும் விசாரணை செய்ய விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதே வழக்கை மேலும் விசாரணை கோரிய அஜய் அகர்வால் தனது வழக்கை வாபஸ் பெற விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் தங்கள் நேரத்தை அனாவசியமாக வீணடித்ததற்காக நிச்சயம் கட்டணம் செலுத்த நேரிடும் என எச்சரித்ததையடுத்து இது குறித்து முறையான காரணங்கள் இருப்பதாக அஜய் அகர்வால் கூற அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேலும் டெல்லி உயர்நீதிமன்றம் இது தொடர்பாக ஹிந்துஜா பிரதர்ஸ் மீதான விசாரணை அனைத்தையும் முடிக்குமாறு கூறி டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இருப்பினும் இந்த மனுவை உச்சநீதிமன்றம் ஊக்குவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.