ADVERTISEMENT

இரண்டு நாள் அரசு முறை பயணமாக ரஷியா செல்கிறார்- பிரதமர் நரேந்திர மோடி!

12:44 PM Sep 03, 2019 | santhoshb@nakk…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நாளை(04/09/2019) ரஷியா செல்லவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ரஷியா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து ஆலோசனை செய்கிறார். அதனை தொடர்ந்து இந்தியா- ரஷியா இடையேயான 20- ஆம் ஆண்டு வருடாந்திர கூட்டத்தில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த சந்திப்பில் இரு நாட்டு உயரதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT



அந்த கூட்டத்தில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு. அதேபோல் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி, அதிபர் விளாடிமிர் புதினிடம் ஆலோசனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இன்று (03/09/2019) டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ரஷியா செல்லும் முன் அமைச்சர்களிடம் பிரதமர் மோடி ஆலோசனை செய்திருப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT