இந்திய பிரதமர் நரேந்திர மோடி 7 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அந்த நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் 'ஹவுடி மோடி' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அமெரிக்க அதிபர் டிரம்பும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்பு இரு நாட்டு தலைவர்களும் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 50,000 பேர் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/billgats 2.jpg)
இதனை தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/EFRe2-9W4AIX0C-.jpg)
அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'தூய்மை இந்தியா' திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் 'குளோபல் கோல்கீப்பர்' விருது வழங்கப்பட்டது. இந்த விருதை உலக பணக்காரர்களில் ஒருவரும், அறக்கட்டளையின் நிறுவனருமான பில்கேட்ஸ் பிரதமருக்கு வழங்கினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us