கரோனா வைரஸ் சிகிச்சையில் முக்கிய மருந்தாக அறியப்பட்டுள்ள ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய விதித்திருந்த தடையை இந்தியா தளர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

india partially lifts ban on hydroxychloroquine export

உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால், சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74,000-ஐ கடந்துள்ளது. மேலும், 2,86,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.இந்நிலையில் கரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்தது.இதனையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும்,மருத்துவ ஊழியர்கள் கரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயினை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தது.இந்த அறிவிப்பை அடுத்து ஹைட்ரோகுளோரோகுயின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தது.

Advertisment

இந்நிலையில், பிரதமர் மோடியுடன் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.அமெரிக்கா இன்றி மற்ற சில உலக நாடுகளும் இதே கோரிக்கையை வைத்தன.இதனையடுத்து ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு இருந்த தடையை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.

http://onelink.to/nknapp

ஹைட்ரோகுளோரோகுயின் மற்றும் பாராசிட்டமால் ஆகியவற்றின் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்தபின்,மீதமிருக்கும் அளவை பொறுத்து ஏற்றுமதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மனிதாபிமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு, நமது திறன்களைச் சார்ந்துள்ள நமது அண்டை நாடுகளுக்குப் பாராசிட்டமால் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவற்றை இந்தியா தேவையான அளவு ஏற்றுமதி செய்யும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா மருந்தை அனுப்பாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment