பிறந்தது '2020' ஆம் ஆண்டு- புத்தாண்டை வரவேற்று நாடு முழுவதும் மக்கள் உற்சாக கொண்டாட்டம்.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, கன்னியாகுமரி, மதுரை, நெல்லை, கோவை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட நகரங்களில் புத்தாண்டை வரவேற்று மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை, மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் 2020 புத்தாண்டை வரவேற்று பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.
டெல்லி,மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் சிஆர்பிஎப் வீரர்கள் உற்சாக நடனத்துடன் புத்தாண்டை கொண்டாடினர்.