india new coronavirus total number of cases 25 says union health ministry

இந்தியாவில் மேலும் 5 பேருக்கு உருமாறிய கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisment

'இந்தியாவில் மேலும் 5 பேருக்கு உருமாறிய கரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 20 பேருக்கு ஏற்கனவே உருமாறிய கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. புனே ஆய்வகத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் மேலும் 4 பேருக்கும், டெல்லி ஆய்வகத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் ஒருவருக்கும் உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உருமாறிய கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 25 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.' இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உருமாறிய கரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment