'நெட்' தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தேசிய அளவிலான கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதி தேர்வு எனப்படும் நெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்வை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'நேஷ்னல் டெஸ்டிங் ஏஜென்சி' (NATIONAL TESTING AGNECY- NAT) நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் என இரண்டு முறை நெட் தேர்வை நடத்துகிறது. இந்நிலையில் மத்திய நெட் தேர்வுக்கு இன்று (09/09/2019) முதல் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

INDIA NET EXAM ONLINE APPLY DATE ANNOUNCED IN MHRD DELHI

அதில் தேர்வுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது. இதற்கான இணையதள முகவரி https://ugcnet.nta.nic.in/webinfo/public/home.aspx ஆகும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 9 தேதி என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு கட்டணத்தை செலுத்துவதற்கு அக்டோபர் 10- ஆம் தேதி கடைசி நாள். எனினும் தேர்வு தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

INDIA NET EXAM ONLINE APPLY DATE ANNOUNCED IN MHRD DELHI

நெட் தேர்வை பொருத்தவரை இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும். முதல் தாளில் 100 மதிப்பெண்களுக்கான 50 கேள்விகளும், இரண்டாம் தாளில் 200 மதிப்பெண்களுக்கான 100 கேள்விகளும் இடம்பெற்றிருக்கும். அதேபோல் இரண்டு தேர்வு தாள்களுக்கும் சேர்த்து தேர்வு நேரம் 3 மணி நேரம் ஆகும்.

APPLY NOW IN ONLIE India MINISTRY OF HUMAN RESOURCE DEVELOPMENT NET Exam ugc
இதையும் படியுங்கள்
Subscribe