Skip to main content

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி!

Published on 18/10/2020 | Edited on 18/10/2020

 

india meteorological department announced tamilnadu, telangana rains

புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை (19/10/2020) உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மத்திய வங்கக்கடலில் நாளை (19/10/2020) புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் இரண்டு நாட்களுக்கு தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம்' என அறிவுறுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

A new depression in the Bay of Bengal

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 18-ம் தேதி வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

 

இந்நிலையில், தற்போது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

Next Story

கனமழை காரணமாக இரு இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

Published on 14/11/2022 | Edited on 15/11/2022

 

Schools holiday in two places due to heavy rains

 

வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 17ம் தேதி வரை மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 17ம் தேதி வரை மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. 

 

இதன் காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கனமழையால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட சீர்காழி, மயிலாடுதுறை போன்ற பகுதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.  இன்று சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்குப் பாதிப்பின் அளவைப் பொறுத்து நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் கூறினார்.

 

இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடியில் பள்ளிகளுக்கு இன்று(15/12/2022) விடுமுறை விடப்பட்டுள்ளது.