'அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்'- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

india meteorological department cyclone forming

அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. காற்றலுத்தத் தாழ்வு மண்டலம்வடகிழக்கு திசையை நோக்கி நகரும். வரும் (ஜூன் 3- ஆம் தேதி) குஜராத்- மகாராஷ்டிரா கடற்கரைஇடையே புயல் கரையைக் கடக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அது 'நிசர்கா' என அழைக்கப்படும். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

india meteorological department cyclone forming

தென்மேற்கு பருவமழையின் அறிகுறியாக கேரளாவில் திருவனந்தபுரம் உள்பட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் கண்ணூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (01/06/2020) மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

cyclone heavy rain INDIA METEOROLOGICAL Kerala
இதையும் படியுங்கள்
Subscribe