/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a1063_1.jpg)
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகியிருந்தது. இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகச் செய்திகள் வெளியாகின. மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ரத்தன் டாடா நேற்று இரவுகாலமானார். டாடா குழுமத்தின் தலைவராக 1991 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை ரத்தன் டாடா பதவி வகித்தார். இவரது மறைவுக்குப் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை தரப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இன்று காலை 10 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். மும்பை தேசிய மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தன் டாடா மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 'தொண்டு, சேவை ஆகியவற்றில் டாடா அளித்த பங்களிப்பு விலைமதிப்பற்றது. தேசத்தை கட்டி எழுப்பிய நெறிமுறைகளுடன் விளங்கிய ஒரு ஆளுமையை இந்தியா இழந்து விட்டது' என இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/A639_3.jpg)
'நம் தேசத்திற்கும் மக்களுக்கும் டாடாவின் பங்களிப்பு அளவிட முடியாதவை. இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் டாட்டா குழுமத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்' என தமிழக துணை முதல்வர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a1064_0.jpg)
'இந்தியாவின் நவீன வணிக தலைமையை வழிநடத்துவதற்கு கருவியாக இருந்தவர் ரத்தம் டாட்டா. இந்தியாவை மேம்படுத்துவதில் அக்கறை கொண்டவர் ரத்தன்' என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இரங்கல் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a83_1.jpg)
'தேசத்தை கட்டி எழுப்புவதில் டாடாவின் பங்கு நவீன இந்தியாவின் வரலாற்றில் பொறிக்கப்படும்' என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
'தொழில்முறைநெறிமுறைகள், சமூக சேவைக்காக அறியப்பட்டவர் தொழிலதிபர் ரத்தன் டாடா. அவரது மறைவு தேசத்திற்கு பேரிழப்பு. அவரது மறைவு செய்தி வேதனை அளிக்கிறது' என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a421_2.jpg)