கரோனாபரவல் காரணமாக பயணிகள் விமான சேவைக்கு இந்தியா ஏற்கனவே தடை விதித்திருந்த நிலையில், தற்போது ஒமிக்ரான்பரவல் காரணமாக அந்த தடை அடுத்தாண்டு ஜனவரி 31 ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில்இந்தியாவுடன் ஏர் பபுள்ஒப்பந்தம் செய்துகொண்ட34 நாடுகளுக்கு மட்டும் விமான சேவை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில்தற்போது சவுதி அரேபியாவும், இந்தியஅரசும்ஏர் பபுள்ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. இதன்காரணமாகவிரைவில் இந்தியா மற்றும்சவுதி அரேபியாவுக்கு இடையே விமான சேவை தொடங்கவுள்ளது.
அண்மையில் சவுதி அரேபியா, இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியை அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.