Advertisment

இந்திய ஐடி ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் 'IBM' நிறுவனம்!

உலகில் மிகப்பெரிய ஐ.டி நிறுவனமான ஐ.பி.எம் 300 இந்திய ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. உலகெங்கும் வளர்ந்த மென்பொருள் நிறுவனங்களில் ஐ.பி.எம் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தின் கீழ் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இயங்கி வருகின்றனர். ஐ.பி.எம் நிறுவனம் ஆனது வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு துறையில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாகவே சுமார் 300 இந்திய மென்பொறியாளர்களை நீக்கியாகவும், அதே போல் செயற்கை நுண்ணறிவு திறன் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் திறன் உள்ள இளைஞர்களை உடனடியாக பணியில் அமர்த்த தயாராக உள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு இந்த தொழில் நுட்ப பயிற்சியை ஐ.பி.எம் நிறுவனமே அளித்தால் அவர்கள் இங்கே பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி நிறுவனத்திடம் எழுப்பப் பட்டதாகவும், ஆனால் அந்த பயிற்சிக்கு அதிக செல்வாகும் என்பதால் பயிற்சி அளிக்க முடியவில்லை என ஐபிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

IBM BANGALORE

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த நிறுவனத்தின் இத்தகைய நடவடிக்கையால் இந்திய ஐடி மென்பொருள் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், ஐடி துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தியாவில் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய மென்பொருள் நிறுவனங்கள் கடந்த காலங்களில் சத்யம் நிறுவனத்தால் அதிக இழப்பை சந்தித்த நிலையில் , அதை விட அதிக பாதிப்பை உலக முழுவதும் ஏற்படுத்தும் , எனவே இத்தகைய தொழில் நுட்பத்தை பொறியியல் படிப்பில் சேர்த்து அவர்களுக்கு கல்லூரிலிலேயே பயிற்சி அளித்தால் மட்டுமே வேலை இழப்பு நீங்கி வேலை வாய்ப்பு பெருகும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்தியாவில் அடுத்தடுத்த நாட்களில் மென்பொருள் நிறுவனங்கள் பணியாளர்களை நீக்கம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

IBM IT EMPLOYEES
இதையும் படியுங்கள்
Subscribe