கதச

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 9 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

உலகளவில் 9.55 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6.82 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20.41 லட்சமாக இருக்கிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சீராக குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியாவில் உருமாறிய வைரஸ் பரவியது. தமிழகத்தில் கூட ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் யாருக்கும் உருமாறிய வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 116 பேருக்கு மட்டும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.