முஸ்லிம்களின் முக்கிய புனித தலமான மெக்காவிற்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அரசு சார்பில் ஆண்டு தோறும் மக்கள் மெக்கா புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டிற்க்கான ஹஜ் புனித பயண ஏற்பாடுகள் குறித்து தனியார் சுற்றுலா நிறுவன பொறுப்பாளர்களுடன், மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி மும்பையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Advertisment

mecca

இந்திய ஹஜ் கமிட்டி மூலம் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதே போல் தனியார் சுற்றுலா அமைப்புகள் மூலம் 60 ஆயிரம் பேர் பயணம் செய்ய உள்ளனர் என்ற தகவலை மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி வெளியிட்டார். இதன்படி சுமார் 2 லட்சம் பக்தர்கள் வரை எந்த வித மானியமும் இன்றி ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள உள்ளனர். அதில் 2 ,340 பெண்கள் ஆண்களின் துணையின்றி ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 2 லட்சம் பேரில் 48 சதவீதத்தினர் பெண்கள் ஆவர்.

mecca

Advertisment

இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையும், 2-ம் கட்டமாக 20-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையும் விமானங்கள் மூலம் பயணிகள் ஹஜ் புனித பயணத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்திய பயணிகளுக்காக மெக்காவில் 11 இடங்களிலும், மதினாவில் 3 இடங்களிலும் சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு முதல் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு வழங்கி வந்த மானியத்தை ரத்து செய்து அதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.