Advertisment

வெளிநாடுகள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து பெற்ற உதவிகள் குறித்து மத்திய அரசின் அறிவிப்பு! 

foreign relief materials

இந்தியாவில் கரோனாஇரண்டாவது அலை ஏற்பட்டு மோசமான பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பல்வேறு நாடுகள் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டின. ஆக்சிஜன், மருந்துகள், மருத்துவ உபகரணங்களை இந்தியாவிற்குசர்வதேச நாடுகள் அனுப்பி வைத்தன. அதேபோல் இந்தியாவிற்கு பல்வேறு அமைப்புகளும்உதவின.

Advertisment

இந்தநிலையில்வெளிநாடுகளும், பல்வேறு அமைப்புகளும்இந்தியாவிற்கு அனுப்பிய உதவிகள் குறித்து மத்திய அரசு, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மத்திய அரசு, வெளிநாடுகளிலிருந்தும், பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பெற்று வருகிறது. அவை உடனுக்குடன் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனஎன மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

மேலும் "மொத்தமாக 15,567 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 15,801 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 19 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள், 10,950 வென்டிலேட்டர்கள் / பைபாப் கருவிகள், 6.6 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் ஆகியவை ஏப்ரல் 27 ஆம் தேதியிலிருந்து மே 20 ஆம் தேதி வரை சாலை மற்றும் வான் மார்க்கமாகமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Indian Government relief corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe