Advertisment

மத்திய அரசின் "EIL" நிறுவனத்தில் மேலாண்மை பயிற்சி!

மத்திய அரசின் "இஐஎல்" (ENGINEERS INDIA LIMITED) நிறுவனத்தில் 79 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் "மேலாண்மை பயிற்சி" (MANAGEMENT TRAINING) நிரப்பப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி: (B.E/B.Tech/B.Sc) உள்ளிட்ட பட்டப்படிப்புகளை 2018, 2019 ஆண்டுகளில் முடித்தவர்களாக இருக்க வேண்டும். அதே போல் "GATE- 2019" தேர்வை எழுதியவர்களே, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி: http://www.engineersindia.com/ (அல்லது) http://recruitment.eil.co.in/ ஆகும்.

Advertisment

eil

ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் நாள்: 31/05/2019, விண்ணப்பிக்க கடைசி நாள்: 20/06/2019. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு மின்னஞ்சல் முகவரி: rectt@eil.co.in அணுகலாம். அதனைத் தொடர்ந்து பணியிடத்தில் தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 15 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். மத்திய அரசின் "நவரத்னா நிறுவனங்களில்" (NAVRATNA COMPANY) இந்த நிறுவனமும் ஒன்று. அதே போல் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பேருந்து சலுகைகள், தங்கும் விடுதி கட்டணங்கள் உட்பட மத்திய அரசு பல சலுகைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

engineers india limited navratna company India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe