Advertisment

சர்வதேச விமான சேவைக்கான தடை நீட்டிப்பு! 

flight

கரோனா பரவல் காரணமாக சர்வதேச பயணிகள் விமான சேவையை 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தடை விதித்த இந்தியா, அத்தடையை அவ்வப்போது நீட்டித்து வந்தது. இந்தநிலையில்கடந்தாண்டு நவம்பர் மாதம், சர்வதேச விமான சேவைக்கான தடையைடிசம்பர் மாதத்தில் நீக்க முடிவு செய்தது.

Advertisment

ஆனால் அதேநேரத்தில்ஒமிக்ரான்பரவல் தொடங்கியதால், விமான சேவைக்கான தடையைநீக்குவதற்கான முடிவை இந்திய அரசு கைவிட்டது. இந்தநிலையில்மத்திய விமான போக்குவரத்துத்துறைஅமைச்சகம், சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

Advertisment

அதேநேரத்தில்இந்தியாவுடன் ஏர் பபுள்ஒப்பந்தம் செய்துகொண்ட நாடுகளுக்கு விமான சேவைதொடரும் என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

OMICRON
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe