உலகம் முழுவதும் கரோனாபாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, இந்தியா சர்வதேச பயணிகள் விமானத்திற்கு தடை விதித்தது. தற்போது இந்தியாவில் கரோனாபாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் சர்வதேச பயணிகள் விமானதிற்கான தடையை இந்தியசிவில் ஏவியேஷன் இயக்குநரகம் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
அதேநேரத்தில்சரக்கு விமானங்களுக்கும், தங்களால் அனுமதி வழங்கப்பட குறிப்பிட்ட விமானங்களுக்கும் இந்த தடை பொருந்தாது எனவும் இந்தியசிவில் ஏவியேஷன் இயக்குநரகம் கூறியுள்ளது. இந்தியாவில் கரோனாஅதிகமாகபரவியதால் சில நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.