ADVERTISEMENT

"இந்திய வரலாற்றில் முதல் முறையாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது" - ரிசர்வ் வங்கி...

04:16 PM Nov 12, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வரலாற்றில் முதன்முறையாக இந்தியா பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தது மத்திய அரசு. இதனால் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், சிறு, குறுந்தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதன்காரணமாக, 2020 - 2021 நிதியாண்டில் முதல் இரண்டு காலாண்டுகளிலும் இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியா பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 23.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. மேலும், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 8.6 சதவீதம் சரியும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நடப்பு நிதியாண்டு முழுவதும் மைனஸ் 9.5 சதவீதம் என்ற அளவிலேயே இந்தியப் பொருளாதாரம் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை துறை சார்பில் வெளியிடப்பட்ட மாதாந்திர அறிக்கையில், "2020-21 ஆம் நிதியாண்டில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா பொருளாதார மந்தநிலைக்குள் செல்கிறது. இரண்டாவது காலாண்டிலும் பொருளாதார வளர்ச்சி மைனஸில்தான் செல்லும். தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக மைனஸில்தான் செல்கிறது. இருப்பினும் மே, ஜூன் மாதத்திலிருந்து இந்தியப் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT