Advertisment

அருணாச்சல பிரதேச எல்லையில் கண்காணிப்பை மேம்படுத்திய இந்தியா!

INDIA CHINA

Advertisment

இந்தியா - சீனா எல்லையில் அமைந்துள்ள மாநிலங்களில்ஒன்று அருணாச்சல பிரதேஷ். இந்த மாநிலத்தைச் சீனா தன்னுடைய பகுதி என உரிமை கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் தற்போது அருணாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள மெய்யான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (line of actual control) இந்தியஇராணுவம் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளது.

தற்போது இராணுவம்அப்பகுதியைக் கண்காணிக்க அதிநவீன ட்ரோன்களை களமிறக்கியுள்ளது. இந்த ட்ரோன்கள் 24 மணிநேரமும் கண்காணிப்பில் இருப்பதோடு, தேவையான படங்களை எடுத்து இராணுவத்துக்கும், கட்டுப்பாட்டு நிலையத்திற்கும் அனுப்பி வருகிறது. மேலும் இந்திய இராணுவம், ஆயுத அமைப்பு திறன் ஒருங்கிணைந்தருத்ரா ஹெலிகாப்டரையும்எல்லை கண்காணிப்பிற்குப் பயன்படுத்தத்தொடங்கியுள்ளது. சீனா எதாவதுஆக்கிரமிப்பு முயற்சியை எடுத்தால், அதைத்தடுக்கவே கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத்தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அண்மையில் லடாக்கில் படை விலகல் தொடர்பாக இந்தியா- சீனா இடையே நடைபெற்ற 13-ம்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் செப்டம்பர் இறுதியில்,அருணாச்சல் பிரதேசத்தில் சுமார் 200 சீன வீரர்களை இந்திய எல்லைக்கு மிக அருகில் இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதாகவும்,சில மணிநேரம் இருநாட்டு இராணுவ வீரர்களும் உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே குவிந்திருந்ததாகவும், பின்னர் இருநாடுகளைச் சேர்ந்த எல்லைப்பகுதி இராணுவ தளபதிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாட்டு இராணுவ வீரர்களும் கலைந்து சென்றதாகவும் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Arunachal Pradesh china India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe