o.p. ravath

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு வருகின்ற டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுவிடும் என்று இந்திய தேர்தல் ஆணையத் தலைவர் ஒ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.

Advertisment

சத்தீஸ்கரில் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டம் நவம்பர் 12லும், நவம்பர் 20ஆம் தேதியும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisment

மத்திய பிரதேசம் மற்றும் மிசோராம் ஆகிய இரு மாநிலங்களுக்கு நவம்பர் 28ஆம் தேதி ஒரு நாளில் தேர்தல் நடைபெறும்.

ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்கத்திற்கு டிசம்பர் 7ஆம் தேதி ஒரே நாளில் தேர்தல் நடைபெறும்.

Advertisment

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் தேர்தல் வாக்குகள் எண்ணும் நாள் 11 தேதி டிசம்பர் என்றும் அறிவித்துள்ளனர்.