நாட்டின் முக்கிய பொருளாதார வல்லுனர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் ஆலோசனை செய்தார். பிப்ரவரியில் மத்திய பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில், பிரதமர் வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, பியூஸ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/narendra modi5.jpg)
இதனிடையே மத்திய பட்ஜெட் தொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜகவினருடன்ஆலோசனை செய்தார். 2020- 2021 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாதம் 1- ஆம் தேதி தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் கூறுகின்றன.
Follow Us