Advertisment

மனித வள மேம்பாட்டு குறியீடு அட்டவணை - இந்தியா சரிவு!

human development index

ஐக்கிய நாடுகள் சபையின், மனிதவளமேம்பாட்டுதிட்ட அமைப்பு, ஆண்டுதோறும் மனிதவள மேம்பாட்டு குறியீட்டு அட்டவணையை வெளியிட்டு வருகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சியை பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டும் அளவிடமால், அந்தநாட்டு மக்களின்தனிப்பட்ட மேம்பாட்டையும் வைத்து கணக்கிடுவதே இந்த அட்டவணையின் நோக்கம்.

Advertisment

ஒரு நாட்டில் உள்ள மக்களின்ஆயுட்காலம், கல்வி, வாழ்க்கைத் தரம் உள்ளிட்டவற்றை வைத்து மக்களின்மேம்பாடு கணக்கிடபடுகிறது. இந்தநிலையில், 2020 ஆம் ஆண்டிற்கான மனிதவள மேம்பாட்டுகுறியீட்டுஅட்டவணை ஐ.நாவால்வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

இப்பட்டியலில், கடந்த வருடம் 129வது இடத்தில் இருந்தஇந்தியா, இந்தமுறை இரண்டு இடங்கள் சரிந்து131 வதுஇடத்தைபெற்றுள்ளது. இந்தப்பட்டியலில், முதல் இரண்டு இடங்களைமுறையே நார்வேமற்றும் அயர்லாந்துஆகிய நாடுகள் பிடித்துள்ளன. கடைசிஇரண்டு இடங்களைமுறையே மத்திய ஆப்பிரிக்க குடியரசு மற்றும் நைஜர்நாடுகள் பிடித்துள்ளன.

Development united nation. India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe