குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூபாய் 13,000 கோடி கடன் பெற்று கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நிரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது மத்திய அமலாக்கத்துறைக்கு தெரிய வந்தது. இதனையடுத்து இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நிரவ் மோடியை லண்டன் போலீசார் கடந்த மார்ச் 19- ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisment

INDIA DIAMOND SHOP BUSINESS MAN NIRAV MODI SWISS BANK ACCOUNT BLOCK FOR TODAY

கைதுக்கு பின் லண்டன் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். லண்டன் நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நிரவ்மோடியின் ஜமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனை ஏற்ற நீதிமன்றம் நிரவ்மோடிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. இதற்கிடையில் சுவிட்சர்லாந்தில் உள்ள நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பூர்வி மோடிக்கு சொந்தமான 4 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இவர்கள் வங்கி கணக்கில் இருந்த ரூபாய் 283.16 கோடியை சுவிட்சர்லாந்து அரசு முடக்கியது. நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரிக்கு சொந்தமான வங்கி கணக்குகளில் கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை புகார் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

INDIA DIAMOND SHOP BUSINESS MAN NIRAV MODI SWISS BANK ACCOUNT BLOCK FOR TODAY

Advertisment

இதே போல் கிங் பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய்மல்லையா உட்பட வங்கியை ஏமாற்றிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுள்ள வங்கி மோசடியாளர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உலக நாடுகளின் உதவியுடன் இந்திய வங்கியை ஏமாற்றி சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது.