ADVERTISEMENT

பாகிஸ்தான் - சீனாவுக்கு செக்: ரஷ்ய பாதுகாப்பு அமைப்பை களமிறக்கிய இந்தியா!

11:33 AM Dec 21, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா கடந்த 2018ஆம் ஆண்டு, ஐந்து எஸ்-400 வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை வாங்க ரஷ்யாவோடு 5.5 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்துகொண்டது. மேலும் இந்தியா, இந்த வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை வாங்க முன்பணமும் செலுத்தியிருந்தது.

இந்நிலையில், இம்மாத தொடக்கத்தில் ரஷ்யா இந்தியாவிற்கு வான்வெளி பாதுகாப்பு அமைப்பினை வழங்கத்தொடங்கியது. இந்நிலையில் இந்திய விமானப்படை, முதல் எஸ்-400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பினை பஞ்சாப் பிராந்தியத்தில் நிலைநிறுத்தியுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானிலிருந்து வரும் வான்வெளி அச்சுறுத்தலைக் கையாள்வதற்காகப் பஞ்சாப் பிராந்தியத்தில் முதலில் இந்த அமைப்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த எஸ்-400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பில், எதிரிகளின் விமானம், அணு ஆயுத ஏவுகணைகள், அவாக்ஸ் விமானங்கள் ஆகிவற்றை 400 கிமீ தூரத்திலும், 250 கிமீ தூரத்திலும், 120 கிமீ தூரத்திலும், 40 கிமீ தூரத்திலும், தாக்கி அழிக்கக் கூடிய நான்கு வெவ்வேறு ஏவுகணைகள் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விமானப்படை வீரர்களும், அதிகாரிகளும் ரஷ்யாவில் எஸ்-400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பை இயக்க பயிற்சி எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT