பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இரண்டு நாள் அரசு முறை பயணமாக மாலத்தீவு சென்றார். அந்நாட்டு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் மாலத்தீவுக்கு இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதன் பிறகு மாலத்தீவில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முஹமது சோலிஹ்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாலத்தீவு அதிபருக்கு இந்தியா சார்பில் நினைவு பரிசாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை (BAT) பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sachin tweet.png)
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் "கிரிக்கெட்டை ஊக்குவித்ததற்கு நன்றி மோடி ஜி" என்றும், "கிரிக்கெட் வரைப்படத்தில் மாலத்தீவையும்" காண நம்பிக்கையுடன் இருக்கிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Follow Us