Skip to main content

சச்சின் தேடிய சென்னை ஓட்டல் ஊழியர் கண்டுபிடிப்பு!

Published on 15/12/2019 | Edited on 15/12/2019

'Elbow Guard'பற்றி சச்சினுக்கு ஆலோசனை வழங்கிய சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டல் ஊழியர் குரு பிரசாத் என்பவர் கண்டுபிடிக்கப்பட்டார். இவர் சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ஆவர். 
 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில் "எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னை டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன். அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் குரு பிரசாத் கண்டுபிடிக்கப்பட்டார். 

india cricket team former player sachin tendulkar search person identified in chennai


இதனிடையே தனியார் தொலைக்காட்சிக்கு குரு பிரசாத் அளித்த பேட்டியில், "2001- ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியின் போது சச்சினுக்கு ஆலோசனை கூறினேன். சச்சினுக்கு ஆலோசனை கூறியது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம், சச்சினுக்கு நான் ஆலோசனை வழங்கியதாக கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதால் கூறாமல் இருந்தேன். சச்சின் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்பதே எனது ஆசை" என்று கூறினார்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் சிபிஐ சோதனை!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
CBI raid in Chennai

சென்னை பெரம்பூரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழுவினர் இன்று (08.04.2024) காலை 06.30 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ரயில்வே துறையில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார். அப்போது அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் ரயில்வே பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியில் இருந்த காலத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூரில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கொடநாடு பங்களாவில் சி.பி.சி.ஐ.டி. ஆய்வு!

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
C.b.C.I.D search in KodaNadu Bungalow

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேர்  ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஒரு ஆண்டாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி. முருகவேல் நியமிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் என்பவர், கொடநாடு பங்களாவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தடயங்களை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதால் நீதிமன்றத்தின் சார்பில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்குமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போது நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், தடயவியல் துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் கொடநாடு பங்களாவிற்கு ஆய்வு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கொடநாடு பங்களாவை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. மாதவன் தலைமையில் விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. முருகவேல், புலனாய்வு அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மின் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் என 20 பேர் கொண்ட குழுவினர் இன்று (07.03.2024) நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின் போது கொடநாடு பங்களாவில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவா என சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உதகை அமர்வு நீதிமன்றத்தில் நாளை (08.03.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.