ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஜஸ்பிரீட் பும்ராவின் பந்து வீச்சு பாணி வித்தியாசமானது. அவரது பந்து வீச்சு பாணியை இளைஞர்கள் பின்பற்றுவது வழக்கமான ஒன்று தான். மூதாட்டி ஒருவர் பும்ரா போல பந்துவீச முயற்சிக்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரீட் பும்ராவின் கவனத்திற்குச் சென்றது. அது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில், இந்த வீடியோ, தன்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டதாக ஸ்மைலி மூலம் பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.