Advertisment

இந்தியாவில் 46,433 பேருக்கு கரோனா!

india coronavirus union health ministry

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 17- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் சில தளர்வுகள் மே 4- ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இருப்பினும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், மால்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், சலூன் கடைகள் திறக்க அனுமதியில்லை என்று அரசு அறிவித்துள்ளது.

Advertisment

இன்று (05/05/2020) காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,836 லிருந்து 46,433 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,389- லிருந்து 1,568 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,762- லிருந்து 12,727ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

india coronavirus union health ministry

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 14,541 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,465 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 583 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் குஜராத்தில் 5,804, டெல்லியில் 4,898, மத்திய பிரதேசத்தில் 2,942, ராஜஸ்தானில் 3,061, தமிழகத்தில் 3,550, உத்தரப்பிரதேசத்தில் 2,766, ஆந்திராவில் 1,650, தெலங்கானாவில் 1,085, கர்நாடகாவில் 651, கேரளாவில் 500, புதுச்சேரியில் 8, பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

http://onelink.to/nknapp

இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

lockdown coronavirus India
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe