Advertisment

இந்தியாவில் 27,892 பேருக்கு கரோனா!

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisment

இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. அதன் பகுதியாகப் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதோடு, கரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.

Advertisment

india coronavirus union health ministry

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,917- லிருந்து 27,892 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 826- லிருந்து 872 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,914- லிருந்து 6,185 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 8,068 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,076 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 342 பேர் உயிரிழந்துள்ளனர்.

india coronavirus union health ministry

அதேபோல் டெல்லியில் 2,918, குஜராத்தில் 3,301, ராஜஸ்தானில் 2,185, தமிழகத்தில் 1,885, மத்திய பிரதேசத்தில் 2,096, உத்தரப்பிரதேசத்தில் 1,868, தெலங்கானாவில் 1,002, கேரளாவில் 458, ஆந்திராவில் 1,097, கர்நாடகாவில் 503, புதுச்சேரியில் 7 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,396 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

union health ministry coronavirus India
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe