உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 66 பேர் குணமடைந்தனர். அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 743 லிருந்து 748 ஆக அதிகரித்துள்ளது. இதனை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.